இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று Phoenix, Arizona, USA 65-0125 1நன்றி சகோ. டெமோக்ஸ்,., (demos) சகோ. கார்ல் ஷாகாரியன். (carl shakarian) அல்லது டெமோக்ஸ் ஷாகாரியன். சகோ. கார்ல் வில்லியம்ஸ். (carl williams) பிரதிநிதிகள் வந்துள்ள யாவருக்கும், இங்கே முக்கிய உழியக்காரனாகிய அந்த சகோதரன், நான் விரும்பினதை அப்படியே இன்று இரவு எடுத்துரைக்கார்; என்று நான் நினைக்கிறேன், அதாவது நான் பேச இருந்ததை அவர் எடுத்து பேசி விட்டார். ஏனென்றால் நான் இதை நன்றாய் அனுபவித்தேன், இந்த கன்வென்ஷன் நான் கலந்துகொண்ட மற்ற எல்லா கன்வென்ஷனை காட்டிலும், நன்றாக இருந்தது என்று நான் நம்புகிறேன். வேற எந்த கன்வென்ஷனிலும் அதிகமான இசைவும் அவ்வளவு அருமையான ஐக்கியத்தையும், சகோதர அன்பையும் நான் கண்டதே கிடையாது. நான் செய்த இன்னொரு காரியம், பரலோகத்தின் பிரதிநிதிகளில் அநேகரை நான் சந்தித்தேன், புதிய சகோதரர்களோடும் கைகுலுக்கவும், பேசவும் எனக்கு சிலாக்கியம் கிடைத்தது, சில இரவுகளுக்கு முன்னே அங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கும், பாப்டிஸ்ட் சகோதரன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன், அவருடைய பெயர் ஞாபகம் வரவில்லை, “இர்வின்” இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் அவருடைய அத்தையிடமிருந்து, ஒரு ஜெப அட்டையை என்னிடம் கொண்டு வந்தார். 2அவள் அந்த ஜெப அட்டையை இருபது வருடங்களாக வைத்துக் கொண்டு இருக்கிறாள், வைத்தியர்கள் மட்டுமே விலக்கி சொல்லக்கூடிய, ஒரு வியாதியுடன் மரித்துக் கொண்டிருக்கிறவளாய், அந்தக் கூட்டத்திற்கு கொண்டுவரப்பட்டால். அது ஏதோ குஷ்டரோகம் போன்றது, ஆனால் அது குஷ்டரோகம் அல்ல. அதற்கு ஒரு அறுவை சிகிச்சை உண்டு, அதில் ஏதோ ஒரு இங்கே ஒரு நரம்பை வெட்டி எடுத்து அல்லது எதோ செய்வார்கள், ஆனால் அவள் வெறுமனே ஒரு தாவரம் போன்று இருப்பாள், அங்கே உட்கார்ந்து கொண்டுதான் இருக்க வேண்டும். அவள் அங்கே அப்படி உட்கார்ந்து கொண்டு இருக்கும்போது, ஒருக்கால் அவளுடைய ஜெப அட்டை கூப்பிடப் படவில்லையோ அல்லது என்னமோ, அவள் ஜெப வரிசையில் வரவே இல்லை. “பரிசுத்த ஆவியானவர் அவளிடமாய் என்னை நடத்தினார்”, இன்றைக்கு அவள் சுகதேகியாய் அங்கே பின்னால் இருக்கிறாள். நாம் அதற்காக இருக்கிறோம், சகோதரனே. நான் நினைக்கிறேன்; அங்கே உன்னோடு பேசிக் கொண்டிருந்தவர், ஹோவரட் இர்வின். என்று நினைக்கிறேன். 3ஆனால் இங்கே இருக்கின்ற அவருடைய அத்தை வேண்டுமானால் அவளை எழும்பி நிற்க சொல்லலாம் என்று சகோதரன். ஷாகாரியன். சொல்லுகிறார் எழும்பி இருப்பீர்களாக. சகோதரியே.. அதோ அவள் இருக்கிறாள். உங்களுடைய கையை அசைத்து காட்டுங்கள்; “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக” என் சகோதரியே. தேவனுடைய குமாரனின் பெயரில் உனக்கு உண்டாயிருந்த வீரமான விசுவாசத்திற்காக; உம்மை வீட்டுக்கு அவர் அழைத்துக் கொள்ளுமட்டாய், அவர் உம்மை சுகத்தோடு வைப்பாறாக. அப்பொழுது இந்த அழிவுள்ளது அழியாமையை தரித்துக் கொள்ளும், இந்த ஜெப அட்டையை; இத்தனை வருஷமாக பத்திரமாக வைத்து வைத்து, அதை இங்கே கொண்டு வந்து இன்றிரவு எனக்கு காட்டியதற்காக, நான் மிகவும் நன்றி உள்ளவனாய் இருக்கிறேன். தண்ணீர் மேல் போட்ட அப்பத்தைப் போன்று, நான் சொல்லிக்கொண்டு இருந்தது உங்களுக்கு தெரியும். அது உன்னிடம் திரும்பி வரும். நீ யாருக்காவது ஏதோ காரியத்தை செய்ய முயற்சிக்கும்போது, அப்படியே ஆகும். 4இந்த அருமையான ஊழியக்காரர்களில், அநேகரை சந்திக்கும் படியான சிலாக்கியம் எனக்கு அளித்தது, இந்த ஒத்துழைப்பையும் அவருடைய அருமையான ஐக்கியத்தையும், நான் நிச்சயமாக பாராட்டுகிறேன். சகோ. கார்ல், அடுத்த வருடம் என்னை, கர்த்தருக்கு சித்தமானால், நாமும் பூமியில் இருந்தால், திரும்பி வரும் படியாய் அறிவிப்பு கொடுத்தால், அடுத்த வருடம் ஒவ்வொருவரையும் நான் சந்திப்பேன் என்று நம்புகிறேன். வந்துள்ள ஒவ்வொருவரும், இன்னொரு பிரதிநிதியை அவனோடும் அவளோடும் கொண்டு வாருங்கள், இப்பொழுது நான் ஒரு காரியத்தை சொல்ல விரும்புகிறேன்; ஒரு சிறு காரியத்தைக் குறித்து கொஞ்ச நேரம் பேசப் போகிறேன், ஏனென்றால்; டாக்டர். ரீட். (Dr Reed. ) அடுத்து பேச இருக்கிறார், இன்றிரவு வெகுதூரம் கடந்த நான் இங்கே வந்துள்ளேன், டாக்டர். ரீட். (Dr Reed.) அவர்கள், பேச கேட்பதற்காக, நான் 250 மையிகள் பிரயாணம் பண்ணி வந்திருக்கிறேன். சற்று முன்பு நடந்த ஒரு சம்பவத்தைக் குறித்து நான் சொல்ல விரும்புகிறேன்; ஆனால் டாக்டர். ரீட். (Dr Reed.) அவர்கள் பேச்சை கேட்க நான் ஆயிரம் மைல்கள் காரோட்டி வருவேன். ஆனால் இங்கே வந்தது முதல், ஏதோ காரியம்; ... கொஞ்சம் முன்னர் நான் கேட்ட காரியங்களை கேட்கும்படியாக நான் ஆயிரம் மைல்கள் காரோட்டி வருவேன். அவ்வளவு அருமையான காரியம் மாம்சமும் இரத்தமும் வெளிப்படுத்த கூடாத காரியம். அதை செய்ய பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே முடியும், அந்த விதமாக என் ஜீவியத்தை ஊக்குவித்த யாரோ ஒருவரை காண்பதற்கு, என் ஜீவிய காலமெல்லாம் நான் நிச்சயமாக, நான் அதிக நன்றி உள்ளவனாக இருப்பேன். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், என்றாவது நான் அறுவை சிகிச்சைக்கு போகவேண்டிய தாய் இருந்தால், ஒரு மருத்துவரை அழைக்க வேண்டியது இருந்தால், நீர் நேராக என்னிடம் வரலாம்; அப்படி ஒரு அறுவை சிகிச்சை எனக்கு இருக்குமானால் அதை செய்கிற வரை என்னால் நம்ப முடியும், தேவனை விசுவாசிக்கின்ற கரங்கள் அதுதான் என் மேல் வேலை செய்ய வேண்டும். 5அப்படி ஒரு போதும் எனக்கு தேவை இருக்காது என்று நம்புகிறேன், ஆனால் அப்படி ஏற்பட்டால் எனக்கு அவர்தான் விருப்பம், அல்லது அவரைப் போன்று ஒரு மனிதன் அந்த வேலையை செய்ய விரும்புகிறேன், ஒருக்கால் அங்கே அவரால் வர முடியாமல் போனால், கடந்த இரவு எனக்கு ஏதோ சம்பவித்து இருக்கவேண்டும். அல்லது நேற்று மத்தியானமா..... எனக்கு உண்மையாகவே ஏதோ வினோதமாக இருந்தது. நான் மிகவும் சுருக்கமாய் இருப்பேன், ஏனென்றால். சகோதரன் நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை, ஏனென்றால் அவர் பேச இருப்பதால்: ஆனால் என் ஊழியத்திற்கு ஒரு விதமான பாராட்டலாய் இருக்கவேண்டும். நான் சிறு காரியங்களையும் கவனிக்கிறேன், ஒவ்வொரு சிறு காரியமும் எனக்கு ஒரு அர்த்தத்தை கொடுக்கிறது. ஒரு கிறிஸ்தவனுக்கு எந்த ஒரு காரியம் சம்பாதித்தாலும், எதர்ச்சையாக வந்தது என்று நான் நம்ப மாட்டேன். அது தேவனால் நியமனம் செய்யப்பட்டது, என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவரிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாய் நடக்கும் படி செய்வேன் என்று இயேசு சொல்லியிருக்கிறார். அதுவே ஒவ்வொரு சிறு காரியத்தையும், அவர் எனக்கு தந்த சின்ன தாழ்மையான ஊழியத்தில், நான் விசுவாசிக்கிறேன். இதை ஜனங்களின்.. ஜனங்களாகிய உங்களுக்கு உதவியாக இருக்கவும், யாவருக்கும் உதவியாக இருக்கவும், நீங்கள் யாவரும், எனக்கு உதவியாக இருக்கவும், மகிமையில் போவதற்கு ஒருவருக்கொருவர் உதவி செய்வதற்காகவும் கொடுத்தார். அதில் ஒவ்வொரு காரியமும், எனக்கு ஒரு அர்த்தத்தை கொடுக்கிறது, நேற்று மத்தியானம் இங்கே என்னுடைய வேத பகுதியை, திருப்ப முடியாமல் போனதை என்னால் நம்பவே முடியவில்லை. 6என் ஜீவியத்தில் அப்படியா ஒருநாளும் நான் உணர்ந்ததில்லை, அதிலும் என் மனைவி கிறிஸ்மஸ்காக எனக்கு ஒரு புதிய வேதாகமத்தை கொடுத்து இருந்தால். என்னுடைய பழைய வேதாகமம் பழுதாகி போனது, ஏறக்குறைய இருபது வருடங்கள் அதை வைத்து இருக்கிறேன், ஹெளஸ்டன் [Houston] சுவிசேஷ கூடார ஜனங்களால் எத்தனையோ வருடங்களுக்கு முன்னர், நான் துவங்கின போது அது எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் அதில் அவ்வளவாய் சந்தோசப்பட்டேன், அது நிலைகளும் காரியங்களும் கடல்கள் கடந்து தவறினாலும், ஏடுகள் கழன்று விழுகிறது, நான் ஒரு அதைப் பொறுக்கி எடுத்தேன், அது ஆதியாகமம் என்று நினைக்கிறேன். அதை கண்டுபிடிக்க நான் எங்கோ உபாகமத்தின் தேட வேண்டி இருக்கும், உங்களுக்கு தெரியும், எங்கே வேதாகமத்தில் வைத்தேன் என்று தேட வேண்டும், ஆகவே கிறிஸ்மஸ்க்கு அவள் எனக்கு ஒரு வேதாகமத்தை வாங்கி கொடுத்தாள். 7அந்த பழைய வேதாகமத்தை ஒரு பக்கமாக ஒதுக்கி வைக்க வெறுத்தேன், அது எனக்கு அவ்வளவு அருமையாக இருந்தது, நான் இயேசு கிறிஸ்து வருவதற்கு முன்னதாகவே போய் விடுவேனனால் அதை என் மீது வைத்து விடுங்கள், அது என்னோடு கூட கீழே போகட்டும் நான் எழும்பி வரும்போது அதனோடு கூட வருவேன் என்று சொன்னேன். ஆக அப்படி அது தான் எப்படியாயினும் என்னுடைய கருத்து. நான் வழக்கமாக சொல்லும் ஒரு கதையைப் போன்று, அது புனித குறவை கொண்டு வரக்கூடாது என்று நம்புகிறேன். ஒரு மனிதன் ஒரு சமயம் அதை சொன்னான் நியூயார்க் கூட்டத்தில் சகோ. ஏர்ல் ப்ரிக்கெட் (Earl Prickett) அதைச் சொன்னார் என்று நான் நினைக்கிறேன், நான் ஒரு மனிதனை சந்தித்தேன் அவன் நீர் ஒரு பிரசங்கியாய் இருக்க இந்த வர்த்தகர்களோடு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?... என்று கேட்டார். நானும் உங்களில் ஒரு வர்த்தகம் என்று சொன்னேன். என்னவிதமான வர்த்தகம்? என்று அவன் கேட்டான், நான் அசுரன்ஸ்( Assurance) என்று சொன்னேன் அவன் இன்சூரன்ஸ் என்று நான் சொன்னதாக நினைத்துக்கொண்டான். ஆகவே நான் சொன்னேன் அசுரன்ஸ் நிச்சயம் என்று. அவன் நீர் எந்த விதமான இன்சுரன்ஸை விற்கிறேன்?. என்று கேட்டான். நான் சொன்னேன் நித்திய ஜீவன் நிச்சயமானது. நான் அதை விற்பனை செய்யவில்லை, நானே அப்படியான ஒரு பாலிசியை உடையவனாக இருக்கிறேன். 8நான் மற்றவர்களுக்கும் அப்படியே சொல்லுகிறேன் என்று சொன்னேன், எனக்கு நினைவு இருக்கிறது நான் ஒரு பையனாக இருக்கும்போது, அவனுடன் பள்ளிக்கு போவேன், அவன் ஒரு இன்சூரன்ஸ் விற்பனையாளராக இருந்தான் இப்பொழுது இன்சுரன்ஸ் என்றால், சரிதான்!.. ஆனால் என்னிடம் ஒன்றுமே கிடையாது. ஆனபடியினாலே அவன் என் வீட்டிற்கு வந்து என்னிடம், பில்லி. உன்னிடம் சில இன்சூரன்ஸ் விற்கலாம் என்று இருக்கிறேன், உன்னுடைய சகோதரனை நான் அறிவேன் சொன்னார். என் சகோதரன் மெட்ரோபாலிட்டனுக்காக. (Metropolitan) விற்கிறான். அவன் சரி. நான் உனக்கு சில இன்சூரன்சுகளை, விற்க்க விரும்புகிறேன் என்று சொன்னான், நான் ஓ. வில்மர். உனக்கு நன்றி என்று சொன்னேன், ஒருவேளை அவன் இன்று இங்கே இருக்கலாம், அவனுடைய சகோதரன் மேல் அறை.. என்ற கட்டுரை எழுதுகிறான். மேல் அறை என்பது ஒரு புத்தகம், நான் சொன்னேன், என்னிடம் அசுரன்ஸ் நிச்சயம் உண்டு என்றேன், அவன் என்ன? நான் ஏதோ ஒரு மாய்மால காரன் போன்று என் மனைவி என்னை நோக்கி பார்த்தால். அவள்.. பில்லி. என்றாள். நான் ஆம் என்னிடம் ஆசுரன்ஸ் நிச்சயமாக உண்டு என்றேன். அவள் ஓ. என்னை மன்னிக்கவும் என்றாள். அவன் இன்சூரன்ஸ் ஒன்றும் இல்லை என்று கேள்விப்பட்டேன் என்றான். நான் இல்லை என்னிடம் நிச்சயம் என்பது உண்டு என்று சொன்னேன். நான் சொன்னதை அவன் புரிந்து கொண்டு; நீ என்ன சொன்னாய்?. என்றான். நான் நிச்சயம் என்று சொன்னேன் என்றேன். அவன் நீ என்னப்பா சொல்கிறாய் என்று கேட்டான். நான் சொன்னேன் ஆசீர்வதிக்கப்பட்ட நிச்சயம். இயேசு என் சொந்தம், ஓ மகிமையான தெய்வீகத்தின் என்னே ஒரு முன் ருசி. தேவனால் வாங்கப்பட்ட இரட்சிப்புக்கு நான் சுதந்திரவாளி. அவருடைய ஆவியினால் பிறந்து அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டேன். என்றேன்.. அவன் சொன்னான். பில்லி உனக்குத் தெரியும் நான் அதை பாராட்டுகிறேன் என்று. அது ஒரு அருமையான காரியம் ஆனால், மகனே அது உன்னை இங்கே கல்லறையில் போடாது என்று சொன்னான். நான் ஆனால் அது என்னை வெளியே கொண்டுவரும் என்றேன். எனக்கு உள்ளே போவதைக் குறித்து பயம் இல்லை, வெளியே வருவதுதான்! புரிகின்றதா. ஆகவே அந்த விதமாகத்தான் நான் உணர்கிறேன், என்று நினைக்கிறேன். நேற்று மாலை நான் வேதத்தை எடுத்து பார்க்கும்போது, என்னால் அந்த பகுதியை கண்டுபிடிக்க முடியாமல் போயிற்று. 9நான் புதிய வேதாகமத்தை எடுத்தேன், நான் பழைய வேதாகமத்தை படித்துவிட்டு, நான் புதிய வேதாகமத்தை எடுத்துக்கொண்டு, என் அக்குளில் வைத்துக் கொண்டு இங்கே ஓடி வந்தேன், இவ்விடத்திற்கு வந்து வேதத்தை திறந்து நான் நினைத்தேன், இங்கேதான் பரிசுத்த யோவான் ; 16: 21 என்று நினைக்கிறேன், அந்த வாசகம் அங்கே இல்லவே இல்லை, நான் சகோ. மூரினிடத்தில் (Moore) அந்த வாசகம் அங்கே தான் இருக்கிறது என்றேன். ஆம் என்றார். நான் மீண்டும் பார்த்தேன் அது அங்கு காணப்படவில்லை. ஆகவே நான் நினைத்தேன், பக்கம் தவறாக வைத்து விட்டார்கள் என்று நான் எண்ணினேன், பின்னர் சகோ. ஸ்டான்லி. (Stanley). வந்து பேராயர் ஸ்டாலின். முன்வந்தார். அந்த மனிதன் என்ன அர்த்தத்தில் சொன்னாரோ எனக்கு தெரியாது, இருப்பினும் அவ்வளவு ஆறுதலாய் இருந்தது, அவர் நடந்து என் பக்கத்தில் வந்து, உறுதியாய் நில்லுங்கள்! சகோதரனே. ஒருக்கால் தேவனே ஏதோ காரியம் செய்யக் கூடும் என்றார். புரிகிறதா.. அதை சொல்லுவார் என்று நினைத்தபோது!, அது என்னை ஊக்குவித்தது, அவர் தீர்க்கதரிசனம் சொன்னார் என்பதை அவர் உணர்ந்து இருக்க மாட்டார், என்று நினைக்கிறேன். ஆனால் சில நிமிஷங்களுக்கு முன்னே இங்கே வரும் முன்பு அவரிடம் பேசினது. நிச்சயமாய் அவர் செய்தார் என்று சொல்லுவேன். ஆகவே நான் என்னுடைய செய்தியாகிய பிரசவ வேதனையின் மீது நான் கொண்டு வந்தேன். நான் அதை சற்றும் மூர்க்கமாய் செய்த விதம், லில்லி பூவைப் பற்றி... அது எப்படி அடியிலே பிளந்து, மேலே எழும்பி வந்து சூரியனையும், பணியையும் இப்படியாய் எல்லாவற்றையும் கிரகித்துக் கொள்கிறது. 10அதன் பின்னர் அது எதிலிருந்து மரிக்க வேண்டுமோ; ஏன்! எதிலிருந்து பிறந்து வந்ததோ, அதிலிருந்துதான் அழிவு வெளிவருகிறது, நான் அதை சபைக்கு எடுத்துக்காட்டாய் ஆக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அப்படியே ஒரு வைத்தியரை போன்று, அவன் ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் போது, இன்றைக்கு இந்த விதமாக சொல்லுகின்ற வைத்தியர்கள் நமக்கு உண்டு. உன்னுடைய பாதத்தை குதிங்காலின் பின்பக்கமாக உராய்த்து, உன் முகத்தில் இருக்கும் புற்றுநோயை சுகப்படுத்தும் என்பார்கள். பாருங்கள். ஆனால் ஒரு நல்ல வைத்தியர் அப்படிப்பட்ட காரியங்களுக்கு செவி கொடுக்க மாட்டான், அவன் வியாதியஸ்தனை மருத்துவ ஆராய்ச்சியின் படி, அவன் படிக்கின்ற புத்தகங்களின் படியே சிகிச்சை அளிப்பான். அவ்விதமாக நான் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முயற்சிப்பது; வியாதியாய் உள்ள ஒரு சபையை! நான் காணும் போது, அவர்களிடத்தில் அவர்களுக்கு ஒரு கைகுலுக்கவோ, அல்லது ஏதாவது காரியமோ அல்லது ஒரு புதிய ஸ்தாபனத்தையோ சொல்ல முயற்சிப்பது கிடையாது. எனக்கு தெரிந்த புத்தகத்தின் படியாய், நான் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். பாருங்கள். ஆகவே ஏதோ விளையாட்டு அம்மையினால் சபையானது அவதிப்படுவதை நான் காணும் போது, அந்த விளையாட்டு அம்மைக்கான மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொண்டு அதிலிருந்து சபையை வெளியே கொண்டுவர நான் விரும்புகிறேன். அதற்குளிருந்து பாவம் முளைத்துக்கொண்டு வருகிறதை நான் பார்க்கும்போது, அதையும் அதே விதமாகத்தான் நான் செய்வேன். 11ஏசாவையும், யாக்கோபையும், ஒப்பிட்டுப் பார்க்க முயற்சித்தேன். பின்னர் அப்படியே காலங்களை பார்த்துக்கொண்டு வந்தோம், நாம் அதற்குள்ளாக போக மாட்டேன், ஆனால் அதை அப்படியே கடைசி பகுதிக்கு கொண்டு வருகிறேன். கடைசியாக உபயோகித்த, என் கடைசி வார்த்தையின்படி ஒப்பிட்டு பார்த்துக்கொண்டிருந்தேன். வேத வாக்கியங்களின் படி, இல்லாமல் இல்லை, ஆனால் இயேசுவானவர் இருக்கும் என்று சொன்னது போன்று, முக்கியமான வைதியர் கடைசி நாட்களில், சபையின் நிலைமை எப்படி இருக்கும் என்று சொன்னது போன்று, அது ஒரு லவோதிக்கேயாவும், திரவிய சம்பன்னனாகவும், குருடாயும், நிர்வானமாயும், பரிதபிக்க பட்ட சபையாயும், சோதோமுடைய நாட்களுக்கு ஒப்பிடப்பட்ட நிலைமையாயும் இருக்கும். அது உண்மை என்று நாம் அறிவோம். சரித்திர வாயிலாக நீங்கள் அதை கவனித்தீர்களானால், முதலாவதாக அவர் நோவாவின் நாட்களை கொண்டு வந்தார். பின்னர் சோதோமின் ஆட்களை கொண்டு வந்தார். அந்த விதமாகத்தான் அது பிரயாணம் செய்தது, அதேபோன்ற மார்க்கம், சரித்திரமானது அநேக முறை செய்கிற தையே, திரும்பத் திரும்ப செய்கிறது, சரித்திரம் செய்கிறது. அதே விதமாகத்தான், வேதத்தில் வாக்குத்தத்தம் செய்கிறது. ஒரு உதாரணமாக மத்தேயு; 3ல் உள்ளபடி., அது சொல்கிறது, எகிப்திலிருந்து என் குமாரனை அழைத்தேன், அதனுடைய வேத குறிப்பைத் தொடர்ந்து பார்ப்பீர்களானால், அவர் எகிப்திலிருந்து அழைத்தது அவருடைய குமாரனாகிய யாக்கோபும் இருந்தது. அது அவருடைய குறைவான குமரனாய் இருந்தது, ஆனால் அவருடைய மகத்தான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் கூட, எகிப்திலிருந்து அழைக்கப்பட்டார். ஆகவே அதற்கு ஒரு தொகையான பதில்களாக இருந்தது, ஆக அதைக் குறித்து அவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை கண்டேன். பின்னர் நான் அதை குறித்ததான என் கருத்துக்களை கொண்டு வந்தேன், நான் மேடையை விட்டு நடந்து வெளியேறினேன், என்னுடைய பிள்ளைகள், வீட்டிற்குப் போகும் வழியிலே இங்கு எங்கோ ஒரு சாண்ட்விச்.. 12வாங்கும் படியாக வண்டியை நிறுத்தினார்கள். நான் உள்ளே போனேன். என் மனைவி பில்லி. எனக்கு மிகவும் என்னவோ போல் இருக்கிறது, எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, அந்த வேதாகமத்தை. நான் உமக்கு கொடுத்தேன் என்றாள். நான் சொன்னேன். நீ அதை எழுதவில்லை, அன்பே. அந்த ஏடுகளை, நீ ஒன்றாய் பொருத்த வில்லை என்றேன். அவள். ஆனால் நான் உனக்கு ஒரு வேதாகமத்தை கொடுத்து, அதில் ஒரு குறை இருக்கிறது என்றால், என்று சொன்னாள். நான் ஒருக்கால் அது இல்லாமல் இருக்கலாம் என்று சொன்னேன். பிள்ளைகளில் ஒன்று அதை எடுத்தது, நாங்கள் அதன் பக்கங்களை எடுத்துப் பார்த்தோம், இல்லை.. எல்லாம் சரியாகத்தான் இருந்தது, ஆனால் நேராக அதன் அடிப்பாகத்தில், அங்கே இரண்டு பக்கங்கள் ஒட்டிக்கொண்டிருந்தன. பாருங்கள். இந்தப் பக்கத்தில் பதினாறும் அதிகாரம் இருந்தது, பதினாறாம் அதிகாரத்தின் தொடர்ச்சி, ஆதியின் அடுத்த பக்கத்தில் இருந்தது. பதினேழாம் அதிகாரம், அதற்கு அடுத்த பக்கத்தில் இருந்தது. பாருங்கள்.. 13அது சரியாக அப்படியே அந்த விதமாகவே இருந்தது, அடுத்த பக்கத்தில் இருந்தது, அந்த இந்திய காகிதம், மிகவும் மெல்லியதாக இருந்தது. ஒன்றாய் ஒட்டிக்கொண்டிருந்தது நான் பதினாறாம் அதிகாரத்திற்கு பதிலாக பதினேழாம் அதிகாரத்தில் இருந்து வாசித்துக்கொண்டிருந்தேன். நான் ஆண்டவரே. நீர் ஏன் இதை செய்தீர், அப்படிப்பட்ட ஒரு காரியம் ஏன் அப்பொழுது இருந்திருக்க வேண்டும், என்று நினைத்தேன். அதெல்லாம் என்னவென்பதை குறித்து பார்க்க உங்களுக்கு தெரியும், நான் அப்படி எண்ணிக் கொண்டு இருந்தேன், ஏனென்றால் எதுவும் எதேர்ச்சையாக நடப்பது கிடையாது. அந்த சகோதரன் சொன்ன ஆறுதலை குறித்து நினைத்துக் கொண்டிருந்தேன், அவர் என்னிடமாய் வந்து, அவர் ஒரு பாதிரியாராக இருந்தார். அவர் உறுதியாய் நில்லுங்கள் என்று சொன்னார், உறுதியாய் கொள்ளுங்கள் தேவன் ஏதோ செய்யப் போகிறார் போலும், ஏதோ அந்த விதமாக சொன்னார், அது எப்படி இருக்க முடியும் என்று நான் எண்ணினேன், பின்னர் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்த போது, ஒரு இடிமுழக்கத்தை போன்றது வானத்திலிருந்து எனக்கு அது வந்தது. 14இப்பொழுது அது உங்கள் புத்திக்கு எட்டாததாய் இருக்கலாம், ஆனால் எனக்கு அது என்னவென்று தெரிகிறது. பாருங்கள். எனக்கு நினைவு இருக்கிறது லூக்கா: 4ம். அதிகாரத்தில், இயேசு தாம் வளர்ந்த ஊராகிய, நாசரேத்தில் உள்ள ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, ஓய்வு நாட்களில் ஜெப ஆலயத்தில் போய் இருப்பது அவருடைய வழக்கமாயிருந்தது, அவர் அப்படி செய்தபோது, அந்த ஆசாரியன் அவருக்கு வேத புத்தக சுருளை, எடுத்து கொடுத்தான் என்று நாம் கவனித்தோம். இயேசுவானவர் வேதசுருளை வாங்கி திறந்து ஒரு பாகத்தை எடுத்து, ஏசாயா: 61, ஆம். அதிகாரம் வேதவாக்கியங்களை வாசித்தார், பின்பு அந்த வேதத்தை அந்த ஊழியக்காரனிடம் கொடுத்து விட்டார். பின்னர் அவர் அங்கு கூடியிருந்த ஜனங்கள் பக்கமாய் திரும்பினார், எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாக இருந்தன, அப்பொழுது அவர், இந்த வேத வாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று என்று சொன்னார். அந்த வேத வாசிப்பு எவ்வளவு வினோதமாக இருந்தது. என்று நாம் அறிவோம். ஏனென்றால் ஏசாயா: 61ல் , 1,2, வசனங்களில் ஒரு பாகத்தை எடுத்தார், ஆனால் அவர் அதில் தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார், இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு காயம் கட்டு தலையும், வியாதியஸ்தரை சுகப் படுத்தவும், பார்வையற்ற கண்களை திறக்கவும், கர்த்தருடைய அனுக்கிரகம் வருஷத்தை கூறவும், என்பதை மட்டும் வாசித்து, பின்னர் வாசிப்பதை நிறுத்தி விட்டார். ஏனென்றால் அடுத்த நியாயத் தீர்ப்பை கொண்டு வருவதாய் இருக்கிறது. அது அவருடைய இரண்டாம் வருகையை சார்ந்ததாய் இருக்கிறது. அவருடைய முதல் வருகையை அல்ல அங்கேயே வாசிப்பதை நிறுத்தி விட்டார். திரும்பி பார்த்து இந்த வேத வாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று என்று சொன்னார். எவ்வளவு அது நேருக்கு நேராக இருந்தது, அங்கே கூடியிருந்த பிரசங்கி மார்களுக்கும், ஜனங்களுக்கும், அது என்ன ஒரு சொற்றொடராயிருந்தது. இதை ஜனங்களுக்கு அவர் தெளிவாக்கி இருக்கக்கூடும், இந்த வேத வாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று என்பது. ஏனென்றால் இங்கே இவர் மேசியாவாக இருக்கிறார். இருந்தபோதிலும் அவர்கள் அதை விசுவாசிக்க வில்லை, இந்த வேலையில் அபிஷேகம் பண்ணப்பட்டவராய், இதோ: அவர் எங்கே இருக்கிறார். அவருடைய பிறப்பிலிருந்தே, அவருடைய ஊழியத்தின் ஒவ்வொரு துணிகையையும், அவர் என்னவாக இருந்தார் என்பதையும் நிரூபித்தது. இருந்தாலும் அதை அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை, என்னே; ஒரு சொற்றொடர். 15ஆனால் அவர், அதை இன்றைக்கும் சொல்ல கூடும்!. ஒரு நபர் அவருடைய கண்களை திறந்தால், அவர்கள் எந்த நாட்களில் ஜீவிக்கிறார்கள் என்பதை, அவர்களால் அறியக்கூடும். அது அவருடைய வேலையாய் இருந்தது, ஏனென்றால் வேத வார்த்தைகள், எல்லா தீர்க்கதரிசிகளும், அந்த நாட்களில் என்ன சம்பவிக்கும் என்று சொன்னார்களோ, அதை அவர் சரியாக, அந்த நேரத்தில் செய்து கொண்டு இருந்தார். என்ன சம்பவிக்கும் என்று தேவன் வாக்களித்துள்ளாரோ, சரியாக அதை இங்கே அப்படியே செய்து கொண்டு இருக்கிறார். அதை காண்கிறதில் அவர்கள் எதை தவற விடுகிறார்கள். அவருடைய ஊழியம் என்ன வாய் இருந்திருக்க வேண்டும் என்று, அங்கே அவர்கள் சீக்கிரத்தில் அறிந்திருக்க வேண்டும். அங்கே இருக்கிறார் மேசியா, வேதவாக்கியம் நிறைவேறிற்று என்று அவர் சொன்ன படியினாலே அவர்கள் அதை அறிந்திருப்பார்கள். நான் இன்றைய தினத்தை நினைக்கிறேன்: அந்த பாதிரியார் வார்த்தையை கொடுத்தது, என்னவாய் இருக்கும் என்று கவனித்தீர்களா, வார்த்தையானது வாசிக்கப்பட்டு திருப்பி ஆசாரியனிடத்தில் கொடுக்கப்பட்டாயிற்று. 16அன்றைக்கு நான் எடுத்துக்கொண்ட, வேதப் பகுதியில் கடைசி குறிப்பு என்னவென்றால், என்னுடைய வேத வார்த்தையை நான் எழுதி வைத்துள்ளேன், அது பரிசுத்த லூக்கா; 17:30. அங்கே இயேசு கிறிஸ்துவானவர், நாம் ஜீவித்துக் கொண்டிருக்கின்றதான, இந்த நாட்களை குறித்து சொல்லிக்கொண்டிருந்தார், ஐஸ்வரியமான லவோதிக்கேயா சபை இருந்தாலும், அரசியலும், சபை அரசியலும், தேசிய அரசியலும், எவ்வளவாக அழுகி இருக்கக்கூடுமோ, அவ்வளவு அழுகி இருந்தது. அதன் பின்னர், அவர் லோத்தின் நாட்களில் நடந்தது போல, வருகின்ற தான இந்த கடைசி நாட்களிலும் நடக்கும், அவர் அங்கே என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள், மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும். பாருங்கள். மனுஷகுமாரன் வெளிப்படும் நாட்களிலும் அப்படியே நடக்கும், உங்கள் கவனத்தை இருக்க விரும்புகிறேன். பாருங்கள். அவர் மூன்று பெயர்களில் வந்தார், அவர் மனுஷகுமாரனாய் வந்தார், அது அவர் தீர்க்கதரிசி, அதைத்தான் அவர் செய்தார். அவர் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தபடியினாலே, அவர் ஊழியத்தை நிரூபித்தார், நாம் யாவரும் அதை அறிவோம், நாம் ஒவ்வொருவரும் அதை அறிவோம், தாம் தேவகுமாரன் என்று ஒரு போதும் அவர் சொன்னதில்லை, அவர் மனுசகுமாரன் என்றுதான் அவர் சொன்னார், இப்பொழுது இன்றைக்கு அவர் தேவகுமாரனாய் இருக்கிறார். 17அது அவர் திரும்பிப் போனபோது, இப்பொழுது அவர் பரிசுத்த ஆவி என்ற வடிவில் காணமுடியாத நபராய் இருக்கிறார். ஆனால் அப்படி இருந்த போதிலும், தேவன் தேவகுமாரனாய் இருக்கிறார். ஆயிர வருஷ அரசாட்சியில், அவர் அவருடைய பிதாவின் சிங்காசனத்தில் உட்காருகிறார், அதில் அவர் தாவீதின் குமாரனாயிருப்பார். அவர் முதலாவது தம்மை ஒரு மனுஷ குமாரனாக, ஒரு தீர்க்கதரிசியாக வெளிப்படுத்தினார், இந்தக் காலத்தில், சபை காலத்தின் ஊடாக மனுஷ குமாரனாக, அல்லது தேவ குமாரனாக, இன்னொரு காலத்தில் தாவீதின் குமாரனாக இருப்பார். மூன்று குமாரர்கள், ஆனால் இங்கே கவனியுங்கள், அவர் சபை காலங்களின் முடிவில், அது அவ்வளவு குழப்பத்துக்கு உள்ளாகி, அவர் தாமே மறுபடியுமாக மனுஷகுமாரனாய், வரும்படியான நிலைக்கு வந்துவிடும். அப்பொழுது மனுஷகுமாரன் வெளிப்படுவார் என்று சொன்னார். 18அந்தக் குழப்பம் எவ்வளவு பொருத்தமாய் இருந்தது நேற்றைய தினம், நீங்கள் அதை தவறு விட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன், தேவ குமாரனுடைய வெளிப்பாடு நமக்கு கிடைக்கப் பெற்றோம், ஆனால் ஆபிரகாமுக்கு கிடைத்த கடைசி வாக்குத்தத்தம், குமாரன் வருவதற்க்கு முன்னே அல்லது பிறப்பதற்கு முன்னர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த குமாரன், வாக்குதத்தம் பண்ணப்பட்ட பிள்ளை காணப் படுவதற்கு முன்னர், தேவன் தம்மைத் தாமே அங்கே சோதோமிலே ஒரு தீர்க்கதரிசியாய் வெளிப்பட்டார். மாமிசத்தில் ஒரு மனிதனாக தேவன் ஏலோஹிம், கொஞ்சம் முன்னர் யாரோ ஒருவர் பேச கேட்டது போன்று, அதை அவருக்குள்ளிருந்த தெய்வத்தின் சரீர பிரகாரமாய் உள்ள பரிபூரணம். அவரே பரிபூரணமாய் இருந்தார், ஏலோஹிம் என்பது சரீர பிரகாரமாக தெய்வத்தின் பரிபூரணம், இங்கே நாம் கவனிக்கிறது, ஆபிரகாம் அவர் வருவதை கண்டபொழுது, அவன் ஏன் ஆண்டவனே என்றான். அங்கே மூன்று பேர்கள் இருந்தார்கள், அங்கே சோதோமில், லோத்து கண்டபோது இரண்டு பேர் இருந்தனர், அவன் என் ஆண்டவன்மாரே என்று சொன்னான், வெளிப்பாடு இல்லாமை. ஆகவே அங்கு என்ன சம்பவித்தது என்று கவனியுங்கள், அவர் வந்தபோது அவர் தம்மை எப்படி அறிந்து கொள்ளும்படி செய்தார். 19நம்மால் முடியாதா? நான் நின்றுகொண்டே இருப்பேனானால் என்னால் இதை சொல்ல முடியாதா? பாருங்கள். அவன் தான் செய்ததை என்னிடம் சொன்னபோது அந்த சகோதரன் தீர்க்கதரிசனம் உரைத்தான், இன்றைய தினம் அந்த வேத வாக்கியத்தை வாசித்து முடித்தவுடன், அவர் என்ன செய்தார் என்பதை கவனியுங்கள். அந்த நாட்களின் மனுஷகுமாரன் ஒரு மனுஷன் அல்ல, ஒரு மானிட வர்க்கம் அல்ல, மனஷ குமாரன் தம்மை அவருடைய ஜனங்களின் மத்தியில், மறுபடியுமாக வெளிப்படுத்துவார். இந்த நாளில் நாம் இப்பொழுது ஜீவிக்கின்றதான, இந்த மணி வேளையில் இந்த வாக்குத்தத்தம் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேறிற்று. உடனே அவர் சபையார் பக்கமாக திரும்பி, பத்தோ அல்லது பனிரெண்டோ, எத்தனை பேர்கள் இருந்தார்களோ தெரியாது. அவர் சோதோமில் செய்த, அதே காரியத்தை அவர் செய்தார். இந்த வேத வாக்கியம் இந்த நாளில் உங்கள் முன்பாக வெளிப்பட்டது. 56 20உங்களுக்கு முன்பாக உண்மையாய் ஆக்கப்பட்டது, பின்பு என் சகோதர சகோதரிகளே, பிரதிநிதிகளே, ஊழியக்காரர்கள், நாம் இங்கே என்னவாய்ருந்தாலும் தேவனுடைய பிள்ளைகள். அப்படியானால் அவருடைய வருகைக்கு நாம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம். அவர் வாக்குப் பண்ணின வேத வாக்கியத்தையை நாம் இப்பொழுது காண்கிறோம், சோதோமின் அக்கினி விழுந்து அது எரிக்கப் படுவதற்கு முன்னர், அது இந்த நாளை போன்று இருந்தது, அந்த வேத வாக்கியம் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேறுவதை காண்கிறோம். அப்படியானால் தேவ குமாரனின் வருகைக்கு நாம் எவ்வளவு நெருக்கமாய் இருக்கிறோம், வேத வாக்கியங்களில் வெளிப்படுத்தல்கள் எவ்வளவு நெருக்கத்தில் உள்ளது, சபையை பாவனையில் கொண்டு வந்து ஆபிரகாமின் மூலமாக அவர் செய்தது போன்று, அது சபைக்கு கொடுக்கப்பட்ட வாக்குதத்தம். அவர் அதில் இருந்தார் ஆபிரகாமுடைய இயற்கையான வித்து எப்படி அவர்கள் தவறிப் போனார்கள் என்பதை நாம் கண்டு கொண்டோம். ஆனால் ஆபிரகாமின் ராஜரீக வித்தோ, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையில் உள்ள விசுவாசத்தின் மூலமாக வந்தவர்கள், இப்பொழுது பூமியின் மேல், இன்றைய தினம் வெளிப் படுகிறார்கள், நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். என் சகோதர சகோதரிகளே நாம் முடிவில் இருக்கிறோம். 21நமக்கு வேற ஒரு பாவனை இல்லை, நான் வேதவாக்கியங்களை பாவனையாய் சொல்லுகிறேன், ஏனென்றால் அதை வார்த்தையினாலும், பாவனையினாளும் விளக்கிச் சொல்ல, எனக்கு போதுமான கல்வி இல்லை. நான் ஒரு பாவனையை எடுத்துக்கொள்கிறேன், ஆனால் நிழலாக அதை காண்பேனேயானால், நான் ஒருபோதும் என் கையையே காணாதவனாய், என் நிழலை மாத்திரம் நான் கண்டிருந்தால், எனக்கு ஐந்து விரல்கள் இருந்தது என்று நான் அறிவேன். அந்த விதமாகத்தான், நீங்கள் பழைய ஏற்பாட்டின் பாவனைகளை, கவனிக்க வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள், அது என்ன செய்கிறது, அது இதன் முன் நிழலாய் இருக்கிறது, இப்பொழுது உள்ள கடைசி காலத்தின், முன் நிழல்தான் சோதோம் என்று இயேசு சொன்னார். 22சோதோமுக்கு வாக்குப்பண்ணப்பட்ட , அதே தேவ வார்த்தைகள், சோதோமில் சம்பவித்து கொண்டிருக்கின்ற அதே வேத வசனங்கள், இந்த நாட்களில் திரும்ப செய்யப்படும் என்று இயேசு சொன்னார். இன்றைய தியானம், சரியாக நமக்கு முன்பாகவே அறியப்பட்டது , கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதை தவற விட வேண்டாம். அடுத்த வருடம் நான் உங்களை காணவில்லை என்றால், இங்கே அவர்கள், அங்கே பொன்னிறமான படிகளில் ஏறும்போது, அங்கே சந்திப்பேன் என்று நம்புகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஜெபிப்போம்.. பிதாவே. வேத வார்த்தையின் படியாக, கடைசி அடையாளத்தையும், பாவனையையும், எங்கள் கண்கள் முன்னதாக வெளிப்பட்டு, நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த விதமாக இருக்கும் என்று, இயேசுகிறிஸ்துவினுடைய வார்த்தை சொல்கிறது. சோதோமிலிருந்தது போன்று, சரியாக அப்படியே உலகத்தை அதின் நிலைமையில் நாம் காண்கிறோம். சபையை அதின் நிலைமையில் நாம் காண்கிறோம். ஒவ்வொரு ஸ்தாபணத்திலும், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், வெளியே அழைக்கப்படுவதை நாம் காண்கிறோம். அந்த இடங்களில் காணப்பட்ட ஜீவன், விட்டின் ரூபத்தை எடுக்கும் படியாக, அவைகளை விட்டு அசைந்து வந்து கொண்டிருக்கிறது. நாங்கள் துரிதமாய் உயிர்த்தெழும் படியாக ஜெபிக்கிறோம் எங்கள் பரலோக பிதாவே, இப்பொழுது சகோதரன் சொன்னது போன்று, அவன் முகத்துக்கு நேராக அவன் தன் கண்கள் மூடி இருக்கும்போது, ஜனக்கூட்டம் அவனுக்கு முன்பாக கடந்து போவதை அவன் கண்டான். ஓ. தேவனே இன்னும் தொடப்படாத கூட்டங்கள் இருக்கிறது என்று நாங்கள் உணர்கிறோம். அன்புள்ள தேவனே எங்களுக்கு உதவி செய்யும், எங்கள் இருதயத்தில் அப்படிப்பட்ட எச்சரிப்பை பெற்றவர்களாக, இன்றைய தினம் இந்த வேத வாக்கியம், நிறைவேறிற்று என்று அறிந்தவர்களாய், இதை விட்டு போகும் படியாய் செய்யும், இயேசுவின் நாமத்தில் ஆமென்... தூரம் தேவனுக்கு ஒரு பொருட்டல்ல, அவர் சர்வவியாபி, அவர் தேவனாய் இருக்க அப்படித்தான் இருக்க வேண்டும். என்னுடைய தாழ்மையான ஊழியத்தில், நடந்ததான சில மகத்தான காரியங்களை நான் அறிந்த மட்டில், தொலைபேசி மூலமாக அல்லது யாரோ அழைப்பது... மகத்தான காரியங்கள் நிகழ்ந்தன. வியாதியாய் உள்ள இந்த ஜனங்களை தேவன் தாமே சுகப் படுத்துவார் என்று, நாம் யாவரும் சேர்ந்து அதை ஒப்புக் கொள்ளுவோமாக. அன்புள்ள பரலோக பிதாவே. ஜெபத்தின் மூலமாக நாங்கள் அவர்களை, உம்முடைய சமூகத்துக்கு கொண்டு வருகிறோம், எல்லாவிதமான கிரியைகளிருந்தும் தவிர்க்கப்பட்ட ஒரு அப்போஸ்தலன் இருந்தான். அவன் அப்பொழுது சிறைச்சாலையில் இருந்தான், அடுத்த நாள் அவனை சிரச்சேதம் பண்ண பட போகிறார்கள், அங்கே ஜான் மாற்க் வீட்டில், ஜெபக்கூட்டம் வைத்திருந்தார்கள். நேராக அந்த சிறைச்சாலை உள்ளறைக்குள், இஸ்ரவேல் புத்திரரை பின் தொடர்ந்ததான அந்த அக்னி ஸ்தம்பம் அதற்குள் வந்தது, அல்லது இஸ்ரவேல் புத்திரர் வனாந்திரத்தின் ஊடாக அதைப் பின்தொடர்ந்து போனார்கள், அந்த ஜெப கூட்டத்தின் நிமித்தமாக, அது அங்கே உள்ளே வந்து எல்லா கதவுகளையும் திறந்து, அந்த அப்போஸ்தலனை வெளியே வீதிக்கு கொண்டுவந்து ஊழியம் செய்ய விடுதலையாக்கினார். இந்த ஊழியர்கள் மிசினரி மார்கள், இப்பொழுது கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார் கர்த்தாவே, நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத வராய் இருக்கிறீர். இன்றிரவு எங்களுடைய ஜெபத்தைக் கேளுமோ தேவனே. நீங்கள் ஜெபிக்கும்போது நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ, அதை பெற்றுக் கொண்டோம் என்று விசுவாசித்தால், அது உங்களுக்கு கொடுக்கப்படும் என்று சொன்னீர். கர்த்தாவே நாங்கள் விசுவாசித்து இயேசுவின் நாமத்தினால் நீர் உம்முடைய மகிமைக்காக சுகப்படுத்த வீர் கர்த்தாவே என்று ஜெபிக்கிறோம். அது சொல்லப்பட்டாயிற்று ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக…. 23[டேப்பின் முடிவு]